Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

இலங்கை நிறுவனத்துடன் ஐஐடிஎம் ஒப்பந்தம்

இலங்கை நிறுவனத்துடன் ஐஐடிஎம் ஒப்பந்தம்
தொழில்நுட்ப ஆராய்ச்சி தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட ஐஐடிஎம் பிரவர்தக் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் டயலாக் ஆக்சியாட்டா நிறுவனத்தினர்.

இதன்மூலம் புதிய தொழில்நுட்பத் தீர்வுகளை உருவாக்கி, இந்தியா-இலங்கை இடையே ஆராய்ச்சி ஒத்துழைப்பை வலுப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

இலங்கையில் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டை ஊக்குவிக்க, ஐஐடிஎம் பிரவர்தக் டெக்னாலஜிஸ் ஃபவுண்டேஷன், டயலாக் ஆக்சியாட்டா பிஎல்சி (Dialog Axiata PLC) நிறுவனத்துடன் உத்திசார் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. இதன்மூலம் புதிய தொழில்நுட்பத் தீர்வுகளை உருவாக்கி, இந்தியா-இலங்கை இடையே ஆராய்ச்சி ஒத்துழைப்பை வலுப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கை தலைநகர் கொழும்பில் அண்மையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, அந்நாட்டின் பல்கலைக்கழகங்கள், அரசு அமைப்புகள் மற்றும் தொழில்துறை நிறுவனங்களுடன் இணைந்து ஆராய்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளில் உரையாடும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை உருவாக்குதல், டெங்கு பரவலைத் தடுக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையிலான மோதல்களைக் குறைத்தல் ஆகியவற்றில் ஆரம்பகட்ட ஆய்வுகளை மேற்கொள்ள இரு நிறுவனங்களும் திட்டமிட்டுள்ளன.

இதுகுறித்து சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி கூறுகையில், "மேம்பட்ட தொழில்நுட்பத் துறையில் இந்த ஒப்பந்தம் மூலம் பயனுள்ள ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம்" என தெரிவித்தார்.

முந்தைய செய்தி
Tree-Planting Initiative Launched in Coimbatore
அடுத்த செய்தி
போருக்கு தயாராகுங்கள் - வடகொரிய ராணுவத்துக்கு கிம் உத்தரவு

தொடர்புடைய செய்திகள்